ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸாரின் தடையையும் மீறி நடை பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் உட்பட சுமார் 1000 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இம்மூவரையும் தூக்கிலிடுவதை தடுப்பதற்காக வேலூர் முதல் சென்னை வரை நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நடை பயணத்திற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. எனினும் பொலிஸாரின் தடையையும் மீறி நடைபயணம் தொடங்கியதையடுத்து சீமான் உட்பட சுமார் 1000 பேர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான சீமான், மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தனது பிரதான நோக்கம் எனக் கூறினார். அத்துடன் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூவரும் இரு தசாப்தங்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் இயக்குநர் சீமான், திமுக ஆட்சிக்காலத்தில் பல தடவை கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் தமிழக முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா கடந்த மே மாதம் பதவியேற்ற பின்னர் சீமான் கைது செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’