இலங்கை இராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என தான் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லிணக்க ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மறுத்துள்ளார்.
'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது, பொதுமக்களை கொலை செய்ததில் எவரும் குற்றவாளியாக காணப்பட்டதாக நான் கூறவில்லை. உண்மையில், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த பொதுவான குற்றச்சாட்டுகள் பொய்யானதாக இல்லாவிட்டால், அவை இலகுவாக மிகைப்படுத்தப்பட முடியும் என்றே கூறினேன்' என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். எல்.ரி.ரி.ஈ இற்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவத்தினர் சிலர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக'வும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரஜீவ விஜேசிங்க கூறியதாக இந்தியாவின் என்.டி.ரி.வி. செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பிலேயே ரஜீவ விஜேசிங்க இவ்வாறு கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’