வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

எதிரிகளுடனான போராட்டம் தொடரும்: தலைமறைவான கடாபி சூளுரை


கேணல் கடாபியின் உரை அடங்கிய ஒலிப்பதிவு அல் ராய் எனும் தொலைக்காட்சியில் நேற்று வியாழக்கிழமை ஒலிபரப்பப்பட்டது.
'லிபிய மக்கள் முழந்தாளிடமுடியாது. சரணடைய முடியாது. நாம் பெண்கள் அல்லர்' என கடாபி கூறியுள்ளார். கடாபியை ஆட்சியிலிருந்து அப்பறப்படுத்திய கிளர்ச்சிப் படையினர், கடாபியின் விசுவாசிப்படைகள் சரணடைவதற்கான கால எல்லையை மேலும் ஒருவாரத்தால் நீடித்துள்ளனர். இந்நிலையில் எதிரிகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு கிளர்ச்சியாளர்களை மேற்குலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, லிபியா தொடர்பாக நேற்று பாரிஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் 63 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 1969 ஆம் ஆண்டு லிபிய மன்னர் இத்ரிஸை பதவியிலிருந்து நீக்கி, கேணல் கடாபி ஆட்சியைக் கைப்பற்றி சரியாக 42 வருடங்கள் பூர்த்தியான நாளில் இம்மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’