கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அமைத்த பிரபல சிற்பி வை.கணபதி ஸ்தபதி சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 84. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். சிற்பி கணபதி ஸ்தபதி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிறந்தவர்.கனிதத்தில் பட்டப்படிப்பு பெற்றவர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் இவர். மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் 27 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை நிர்மாணித்த குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன்
பரம்பரையில் அவர் வந்த்தாக அவரது குடும்பத்தினர் கூறுவர்.
பண்டையக் கட்டிடக்கலைக்கும் இன்றைய கட்டிடக்கலைக்குமிடையே பாலமாக விளங்கியவர் கணபதி ஸ்தபதி என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் ''நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு வயது 84. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். சிற்பி கணபதி ஸ்தபதி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிறந்தவர்.கனிதத்தில் பட்டப்படிப்பு பெற்றவர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் இவர். மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் 27 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
பண்டையக் கட்டிடக்கலைக்கும் இன்றைய கட்டிடக்கலைக்குமிடையே பாலமாக விளங்கியவர் கணபதி ஸ்தபதி என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் ''நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’