ஹி 'யூமன் றைற் வோச்டோக்' என்னும் மனித உரிமை நிறுவனம் அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டைக் கண்டித்து 69 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மே 2009இல் விடுதலைப் புலிகள் மீதான இறுதித் தாக்குதலின்போது 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவதாக நேரில் கண்ட சாட்சியங்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் ஆதாரம் காட்டி இந்;த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் மக்கள் செறிந்து காணப்படுவதை தெரிந்துகொண்டும் அவ்விடங்கள் மீது ஷெல்த் தாக்குதல் மேற்கொண்டதாக இராணுவத்தின் மீதும் பொதுமக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும்? எனத் தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையில் அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம், பணிவீச்சம் அமைப்பு, செயல்முறை என பலவகையிலும் குறைபாடு கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் முன்னாள் அரச ஊழியர்கள் அதிகம் காணப்பட்டதாகவும் கொலைகள், ஆட்கடத்தல் தொடர்பில் சான்றுகளை ஆராய இது தவறிவிட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சர்வதேச விசாரணைக்கு நம்பத்தகுந்த மாற்றாக இந்த ஆணையகத்தின் நடவடிக்கைகளை கொள்ளமுடியாது என மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஸாம் சரிபி கூறியுள்ளார். 100,000 உயிர்களை காவுகொண்ட 40 வருடகால யுத்தம் விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு படையினரால் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை என தொடர்ந்து கூறி வருகின்றது.
ஆயினும் ஐ.நா.வால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இரண்டு தரப்புக்களாலும் போர்க்குற்றம் புரியப்பட்டதாக கூறியுள்ளது.
கொழும்பின் நெருங்கிய கூட்டாளி நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா.வின் அரங்கங்களில் வரவிருந்த கண்டனங்களிலிருந்து இலங்கையைக் காப்பாற்றியுள்ளன. ஆனால் மனித உரிமைகள் மன்றத்தில் வாக்கெடுப்பதை வீட்டோ அதிகார நாடுகளால் தடுக்க முடியாது.
தண்டனையின்றி தப்பிக்கொள்ளுதல் எப்போதாவது ஒரு நடப்பதாக அன்றி வழமையாகிவிட்டது. மேலும் யுத்தத்திற்கு பிந்திய வெற்றிப் பெருமிதம் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட துர்ப்பிரயோகங்களுக்கான பொறுப்பை மறுத்து வருகின்றது என ஸரிபி கூறினார். சர்வதேச சமூகம் ஒரு சுயாதீனமான விசாரணையை வலியுறுத்த வேண்டும் என அவர் கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’