அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் பாடசாலையைச் சேர்ந்த பத்து வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறாத வண்ணம் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரண. அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் ஜெலிஜ்ஜவல பாடசாலையைச் சேர்ந்த 10 வயதே நிரம்பிய சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு மேலும் விளக்குகையில், குறித்த பாடசாலையின் பரீட்சை மண்டபத்தை துப்புரவு செய்ய வருகை தந்த 10 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற் கொண்டமையானது துரதிஷ்டவசமானது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்ததாக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததையடுத்து அது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு பாரபட்சமற்ற வகையில் அதிகபட்சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதன்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றும் என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’