இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரங்கள் பொய் எனவும் இந்த அறிக்கை முழுவதுமே சந்தேகத்துக்குரியது எனவும் ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிரூபர்கள் சங்கம் ஒழுங்கு செய்த 'பொய் சொல்ல ஒத்துப்போதல்' (Lies agreed upon) என்னும் வீடியோவை காட்சிப்படுத்திய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சவேந்திர சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், 'இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைய வந்தவர்கள் என்ன நிறக் கொடியை கொண்டு வந்தார்கள் என நாம் பார்க்கவில்லை. இவர்கள் எமது மக்கள் என்பதையே நாம் கருத்தில் கொண்டிருந்தோம்.
600 சிறுவர் போராளிகள் உட்பட சரணடைய வந்த 11000இற்கும் மேற்பட்டோரை நாம் ஏற்றுக்கொண்டோம் என்பதை வலியுறுத்துகின்றோம்.'
இதன்போது, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது 58ஆவது படைப்பிரிவு ஷெல் தாக்குதல் நடத்தியமை பற்றி ஐ.நா. ஊடக பிரிவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் மத்தியூ றஸல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சவேந்திர சில்வா,
'ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படவில்லை. அத்துடன் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று 55ஆவது படைப்பிரிவே புதுக்குடியிருப்பிலேயே இருந்தது.
இதிலிருந்து நீங்கள் பயன்படுத்தும் நிபுணர் குழு அறிக்கை பிழையானது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் என மத்தியூ றஸலுக்கு கூறினேன்' என் சவேந்திர சில்வா கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’