வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 ஆகஸ்ட், 2011

நல்லூர் கந்தசுவாமி ஆலய ரதோற்சவம் வானிலிருந்து பூமாரி பொழிந்து சிறப்பாக நடைபெற்றது

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழாவான இன்று இலங்கை வான்படையின் உலங்கு வானூர்திகள் பூமாரி பொழிந்தன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா இன்றைய தினம் (27) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஆகியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. இன்றைய தினத்தின் விசேட அம்சமாக அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய உலங்குவானூர்திகள் பறப்பில் ஈடுபட்டவாறு வானத்தில் இருந்து பூமாரி பொழிந்த போது பக்தர்கள் அரோகரா என கூறி பரவசத்தில் ஆனந்த குதூகலித்தனர். இந்த தேர்திருவிழா உற்சவத்தை பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலத்திரனியல் ஊடகங்கள் நேரடியாக ஒலி ஒளிபரப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் பக்தர்கள் தீச்சட்டிகள் காவடிகள் குறிப்பாக தூக்கு காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொண்ட இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் அடங்கிய குழுவினர் நல்லை ஆதீனத்திற்கும் விஜயம் செய்து ஆதீன முதல்வருடனும் கலந்துரையாடினர். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தீர்த்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’