வ
ன்னியில் வெடிவைத்தகுளம் முதல் முள்ளியவளை வரையான பகுதியினை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதேபோல் மண்ணின் மகிமை என்ற திட்டத்தின் கீழ் உரிமை கோராத காணிகளை அரசுடைமையாக்கும் செயற்பாடும் இடம்பெறுகின்றது. இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராயும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது வன்னிப் பகுதியில் வெடிவைத்தகுளம் முதல் முள்ளியவளை வரையில் உள்ள சுமார் 10 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல். வலயத்துடன் இணைக்கப்போவதாக காணி உரிமையாளர் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வெடி வைத்த குளம் பகுதியில் உள்ள வயல் ஒன்றின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது அவரது வயல் விதைக்கப்பட்டு இருந்துள்ளது. இது குறித்து படையினரிடம் கேட்டபோது இந்தக் காணிகள் மகாவலி எல். வலயத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் எனவே இந்தக் காணிகளில் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியினை மகாவலி> எல். வலயத்துடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பாரதுரமான விடயமாகும். இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதேபோன்று மண்ணின் மகிமை எனும் திட்டத்தின் கீழ் வடக்கில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் அது குறித்து அறிவித்து அந்தக் காணிகளின் உறுதிகளையும் காணி சொந்தக் காரர் என்பதற்கான அடையாள அட்டையினையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படுவதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மக்கள் இன்னமும் முழுமையாக குடியேற்றப்படவில்லை. இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் இன்னமும் வருகை தரவில்லை. வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது. எனவே இத்தகைய நடைமுறை தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதனால் பெருமளவானோர் காணி உரிமையினை கோர முடியாத நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தையும் உடனடியாக நடத்தாது சாதாரண நிலை திரும்பும் வரையில் குறித்தத் திட்டத்தினை ஒத்திவைக்கவேண்டும். இவ்விடயங்கள் குறித்து விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடி ஆராயவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’