வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 ஆகஸ்ட், 2011

'இலங்கையுடனான பொருளாதார உறவுகளை மட்டுப்படுத்த முடியாது'

மிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இலங்கையுடன் உள்ள பொருளாதார உறவுகளை மட்டுப்படுத்த முடியாதென ம.தி.மு.க. தலைவர் வைகோவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை குறைக்கும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நாடாளுமன்ற இல்லத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் இதனைக் கூறினார்.
இலங்கையின் மூலோபாய மற்றும் வர்த்தக பங்குதாரராக இந்தியா விட்டு விலகும்போது அந்த இடத்தை சீனா பிடித்துக்கொள்ளுமெனவும் அவர் கூறினார்.
'இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காக சீனா ஏற்கெனவே இலங்கைக்கு கடற்படை உதவிகளை வழங்கியுள்ளது. சீனா இந்தியாவை விட பாகிஸ்தானை கூடிய நட்பு நாடாக கருதுகிறது' என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’