வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 ஆகஸ்ட், 2011

'பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையானது குற்றங்கள் இடம்பெறவில்லை என உலக நம்ப வைப்பதற்கான முயற்சி'

லங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள 'மனிதாபிமான நடவடிக்கையின் உண்மைப் பகுப்பாய்வு' என்ற பெயரிலான புதிய அறிக்கையை விமர்சித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என உலகை நம்பச்செய்வதற்கான ஒரு முயற்சி எனக் கூறியுள்ளது.

'யுத்தத்தின் கடைசி மாதங்களில் பொதுமக்கள் உயிரிழந்ததை இலங்கை அரசாங்கம் இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், திருப்தியளிக்காத வகையில், அதற்கு பொறுப்பேற்கவில்லை' என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரையன் அடம்ஸ் கூறியுள்ளார்.
மோதலின்போதான அரசாங்கத்தின் அட்டூழியங்கள் தொடர்பாக குவியும் சாட்சியங்களை மூடிமறைப்பதற்கான பளபளப்பான புதிய முயற்சி இது என அவர் கூறியுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையானது, அதிகரித்துவரும் சாட்சியங்களுக்கு முரணாக, தமிழ் புலிகளுடனான யுத்தத்தின்போது, அரசாங்கப் படைகளினால் அட்டூழியங்கள் எதுவும் இடம்பெறவில்லை என உலகை நம்பச்செய்வதற்கான மற்றொரு பலவீனமான முயற்சி என பிரையன் அடம்ஸ் கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்ட சர்வதேச பொறுப்புடைமை முயற்சிகளை ஆரம்பிப்பதிற்கு உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்ட இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் பயன்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’