வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 ஆகஸ்ட், 2011

சனல் 4 உள்ளிட்ட சர்வதேச அழுத்தம் சுற்றுலாத்துறையை பாதிக்கவில்லை: லக்ஷ்மன்

னல் 4 நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை எந்த வகையிலும் பாதிப்படையவில்லை.
சர்வதேச மட்டத்தினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்புத்தகம் பதில் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச அழுத்தம் சுற்றுலாத்துறையை பாதிக்கவில்லை என அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் மூன்று இலட்சத்து 81 ஆயிரத்து 538 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 36.9 வீத வளர்ச்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே பிரதியமைச்சர் இந்த விடயங்களை கூறினார். பிரதியமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மீது சர்வதேசத்தின் சில பகுதிகள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறையில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன.
சர்வதேசத்தின் சில அமைப்புக்கள் என்ன கூறினாலும் சர்வதேச நாடுகளில் வசிக்கின்ற மக்கள் சுற்றுலாத்துறையை பொறுத்தவரை இலங்கையை விரும்புகின்றனர்.
மேலும் இலங்கைக்கு வந்து செல்கின்ற சுற்றுலாப்பயணிகள் மீண்டும் தமது நாடுகளுக்கு சென்றதும் எமது நாடு தொடர்பில் சாதகமான முறையில் கருத்து வெளியிடுகின்றனர். எனவே சுற்றுலாத்துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதனை தெரிவிக்கவேண்டும். பல்வேறு நோக்கங்களுக்காக சர்வதேசத்தின் சில சக்திகள் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் அழுத்தங்களையும் பிரயோகிக்ன்றன.
ஆனால் சர்வதேச மட்டத்தினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்புத்தகம் பதில் கூறும். அந்த ஆவணம் சிறந்த முறையில் அனைவரதும் தகவல்களையும் விடயங்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை வெளிநாடுகளுக்கு வழங்கவும் தூதரகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அனைத்து ஊடகவியலாளர்களுக்கு இந்த புத்தகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிரபாகரனின் பெற்றோர் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் மனைவி பிள்ளைகள் உள்ளிட்டவர்களை அரசாங்கம் எவ்வாறு பாதுகாத்தது என்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது இராணுவ வீரர்கள் எவ்வாறான அர்ப்பணிப்பை மேற்கொண்டனர் என்பது குறித்தும் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே யுத்தகாலத்தில் சுற்றுலாத்துறைக்கு காணப்பட்ட அச்சுறுத்தலை பார்க்கும்போது தற்போது எமக்கு எதிராக முன்வைக்கப்படும் அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல.
இதேவேளை நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே பயணிக்கின்றது. இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் மூன்று இலட்சத்து 81 ஆயிரத்து 538 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 36.9 வீத வளர்ச்சியாகும். ஒவ்வொரு மாதமும் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியைக் கண்டுவருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்துக்குள் 7 இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்று நம்புகின்றோம். அத்துடன் இந்த வருடத்தில் 585 மில்லியன் டொலர்கள் இலாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
ஏனைய பல நாடுகளில் இக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவடையும் காலமாகும். சில நாடுகளில் 15 வீதத்தினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சிகண்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதேவேளை முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்கவேண்டாம் என்று எதிர்க்கட்சியினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அண்மைக்காலங்களில் முதலீட்டாளர்கள் விடயத்தில் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாதகமாக உள்ளன. எனவே அவ்வாறு முதலீடுகள் பாதிக்கப்படும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் என்று கோருகின்றோம் என்றார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் ரூமி ஜவ்பரும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’