வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 ஆகஸ்ட், 2011

'அழுக்கு கறுப்பு தமிழர்கள்'; சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க இராஜதந்திரி



மெரிக்க ராஜதந்திரியொருவர் சென்னையில் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றுகையில், அழுக்கான, கறுப்பு தமிழர்கள் எனக் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிகூற்று முறையற்றது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை விடுக்கும் நிலைக்கு சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் தள்ளப்பட்டது.
அமெரிக்க உதவி தூதுவர் மௌரின் சாவோ, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தியபோது 20 வருடங்களுக்குமுன் தான் மாணவியாக இந்தியாவில் பயணம் செய்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார். "டெல்லியிலிருந்து ஒரிஸாவிற்கான 24 மணித்தியால ரயில் பயணமொன்றை நான் மேற்கொண்டேன். ஆனால் 72 மணித்தியாலங்களின் பின்னரும் ரயில் சேருமிடத்தை அடையவில்லை. எனது தோல் தமிழர்களைப் போல் அழுக்காகவும் கறுப்பாகவும் மாறியது" எனஅவர் கூறினார். '20 வருடங்களுக்கு முன் உங்களைப் போல் நானும் ஒரு மாணவியாக இருந்தேன். ஓர் அரையாண்டுக் கல்வியை வெளிநாட்டில் கற்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை தேர்ந்தெடுத்தேன். அதன் கலாசாரம் மற்றும் சமயத்தினால நான் ஈர்க்கப்பட்டேன். அக்கலாசாரத்தை நன்றாக புரிந்துகொள்வதற்காக கிராமங்களுக்கு பயணம் செய்தேன். அன்பும் கருணைக்குணமும் நண்புணர்வும் கொண்ட அம்மக்களை பார்த்து வியப்படைந்தேன்' எனவும் சாவோ கூறினார். ஆனால், அவர் தெரிவித்த தமிழர்களைப் போன்று அழுக்கான கறுப்பான என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சர்ச்சையை தணிப்பதற்காக அமெரிக்கத் தூதரகம் விளக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளது. "திருமதி சாவோ தனது உரையின்போது முறையற்ற கருத்தொன்றை கூறிவிட்டார். இதனால் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக அவர் மிக வருந்துகிறார். அது நிச்சயமாக அவரின் நோக்கமாக இருக்கவில்லை' என அவ்வறியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’