வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 ஆகஸ்ட், 2011

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ.மனு நிராகரிப்பு

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஜெயலலிதா தனது தரப்பு நியாயத்தை எழுத்து மூலம் தாக்கல் செய்யவும், மேலும் காணொளிக் காட்சி வசதி மூலம் தன்னிடம் விசாரிக்க வேண்டும் என்றும் வைக்கப்பட்ட கோரிக்கையையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா இன்று வௌ்ளிக்கிழமை தள்ளுபடி செய்தார். தற்போது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் முழு நேரமும் அங்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை விசாரணையை தொடங்க கூடாது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா நேரில்தான் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், எப்போது ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’