லிபியாவில் கர்ணல் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், உடனடியாக போர்நிறுத்தம் வரவேண்டும் என்று லிபிய அரசாங்கம் கோரியுள்ளது.
சனிக்கிழமை இரவு திரிபோலி நகரின் சில பாகங்களில் கிளர்ச்சிப் படையினருக்கும்
கடாஃபிக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே கடும் சண்டைகள் நடந்திருந்தன.
தலைநகரை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்ற முனைவார்களேயானால், மக்கள் நிறைய பேர் உயிரிழக்க நேரிடும் என்று லிபியாவின் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்ணல் கடாஃபி ஆட்சிக்கு முன்பில்லாத அளவில் தற்போது கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. கிளர்ச்சிப் படைகள் தற்போது தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஆனாலும் அவர்கள் தலைநகரை எட்டுவதற்கு முன் கடுமையான எதிர் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், திரிபோலிக்குள்ளேயே எழுச்சி ஆரம்பித்து விட்டிருக்கலாம் எனத்
தெரிகிறது. ஏனென்றால் இந்நகரின் பல பகுதிகளில் சனிக்கிழமை இரவு கடும் சண்டைகள்
நடந்திருந்தன.
கிளர்ச்சிக்காரர்களை 'ஒழித்து விட்டேன்' என கடாஃபி தனது மக்களுக்கு அறிவித்ததை அடுத்து இந்த சண்டைகள் நடந்தன.
சண்டையின் சத்தங்களை வைத்துப் பார்க்கும்போது துருப்பினர் இருக்கின்ற எல்லா ஆயுதங்களளையும் பயன்படுத்தி கிளர்ச்சிக்காரர்களை தாக்குவதற்கு உத்தரவு வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு யுத்தமில்லாத வழியில் தீர்வு காண முடியும் என்றும், அது சாத்தியமே என்பதை தமது அரசாங்கம் மாதக் கணக்கில் சொல்லி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால், நேட்டோவின் கரங்கள் ரத்தக் கரை படிந்தவையாக மாறியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது." என்றும் லிபிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
நேட்டோ இராணுவ உதவி வழங்கியதால்தான் கிளர்ச்சிப் படையினரால் திரிபோலிவரை முன்னேறி வர முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
"இப்போது அவர்கள் திரிபோலிக்குள்ளும் நுழைய அனுமதிக்கப்பட்டால், அரசியல் சீர்திருத்தம் அவர்களது நோக்கமாக இருக்காது. இரத்த வெறியும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவர்களிடையே மேலோங்கி நிற்கும்." என்று லிபியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைநகரை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்ற முனைவார்களேயானால், மக்கள் நிறைய பேர் உயிரிழக்க நேரிடும் என்று லிபியாவின் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்ணல் கடாஃபி ஆட்சிக்கு முன்பில்லாத அளவில் தற்போது கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. கிளர்ச்சிப் படைகள் தற்போது தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஆனாலும் அவர்கள் தலைநகரை எட்டுவதற்கு முன் கடுமையான எதிர் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால், நேட்டோவின் கரங்கள் ரத்தக் கரை படிந்தவையாக மாறியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது."
லிபிய உள்துறை அமைச்சர்
கிளர்ச்சிக்காரர்களை 'ஒழித்து விட்டேன்' என கடாஃபி தனது மக்களுக்கு அறிவித்ததை அடுத்து இந்த சண்டைகள் நடந்தன.
சண்டையின் சத்தங்களை வைத்துப் பார்க்கும்போது துருப்பினர் இருக்கின்ற எல்லா ஆயுதங்களளையும் பயன்படுத்தி கிளர்ச்சிக்காரர்களை தாக்குவதற்கு உத்தரவு வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
"உடனடி போர்நிறுத்தம் வேண்டும்"
இதனிடையே இன்று லிபியாவின் உள்துறை அமைச்சர் உடனடியாக போர்நிறுத்தம் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு யுத்தமில்லாத வழியில் தீர்வு காண முடியும் என்றும், அது சாத்தியமே என்பதை தமது அரசாங்கம் மாதக் கணக்கில் சொல்லி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால், நேட்டோவின் கரங்கள் ரத்தக் கரை படிந்தவையாக மாறியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது." என்றும் லிபிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
நேட்டோ இராணுவ உதவி வழங்கியதால்தான் கிளர்ச்சிப் படையினரால் திரிபோலிவரை முன்னேறி வர முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
"இப்போது அவர்கள் திரிபோலிக்குள்ளும் நுழைய அனுமதிக்கப்பட்டால், அரசியல் சீர்திருத்தம் அவர்களது நோக்கமாக இருக்காது. இரத்த வெறியும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவர்களிடையே மேலோங்கி நிற்கும்." என்று லிபியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’