வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 ஆகஸ்ட், 2011

இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா


லங்கையுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. பள்ளேகல, முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாய இலங்கை அணி 41.1 ஓவர்களில் 191 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணியின் சார்பில் ஒருவரும் அரைச்சதம்கூட பெறவில்லை. அதிகபட்சமாக பின்வரிசை வீரர் சுராஜ் ரந்தீவ் 41 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜோன்ஸன் 31 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்குமுன்; 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே அவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது. இன்றைய போட்டி மிட்செல் ஜோன்ஸனின் 100 ஆவது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களில் ஷேன் வட்ஸன் 69 ஓட்டங்களையும் ரிக்கி பொன்டிங் 53 ஓட்டங்களையும் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர். google_ad_client = "pub-0350517862314913"; google_ad_host = "pub-1556223355139109"; google_ad_host_channel="00000"; /* 300x250, created 10/30/09 */ google_ad_slot = "1352556969"; google_ad_width = 300; google_ad_height = 250; //-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’