நிறுவனங்களின் உட்தகவல்களைப் பெற்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோதமான முறையில் 63.8 மில்லியன் டொலர் லாபமீட்டியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம்,
அமெரிக்க சமஷ்டி விதிமுறைகளைவிட குறைந்த தண்டனையை வழங்குமாறு நீதிபதியிடம் கோரியுள்ளார். நீண்டகால சிறைத்தண்டனையான மரண தண்டனைக்கு நிகராக அமையும் எனவும் இது குற்றத்தின் தீவிரத்தன்மையை மிகைப்படுத்துவதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய, 54 வயதான ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க சமஷ்டி விதிமுறைகளின்படி பதினைந்தரை முதல் பத்தொன்பதரை வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குவதாக வழக்குத்தொடுநர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி ரிச்சர்ட் ஹோல்வெல் செப்டெம்பர் 27 ஆம் திகதி ராஜரட்னத்திற்கான தண்டனையை அறிவிப்பார்; என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நீதிபதி அமெரிக்க சமஷ்டி விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’