வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 ஆகஸ்ட், 2011

கோட்டாபயவின் கருத்தை கருணாநிதி நிராகரிப்பு

மிழ் நாட்டில் உள்ளவர்கள் அரசியல் லாபத்திற்காகவே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கின்றனர் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் தவறான கருத்து என தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.
 'திமுக அரசியல் லாபத்திற்காகத்தான் அதைச் செய்கிறது என கோட்டாபய கருதினால் அது முற்றிலும் தவறானது. திமுக நீண்டகாலமாக அதற்காக போராடுகிறது. திமுக, இலங்கைத் தமிழரின் விடுதலையை விரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார்' என கருணாநிதி கூறியுள்ளார். போராட்டத்தின் மூலமாக உரிமையை பெற விரும்பும் மக்கள், அவர்களின் அரசியல் உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் இனஅழிப்பை திமுக ஆதரிக்கவில்லை எனக் கூறியுள்ள கருணாநிதி, 'யுத்தத்தின் போது மக்கள் இறப்பது இயற்கையானதுதான் எனக் கூறிய ஜெயலலிதா போன்றவர்கள் அல்ல நாம்' எனவும் தெரிவத்துள்ளார். சுவிஸ் வங்கியில் தான் 35,000 கோடி ரூபாவை பதுக்கிவைத்திருப்பதாக தெரிவித்த தமிழ் பத்திரிகையொன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் கருணாநிதி கூறினார். இந்த கல்வியாண்டிலிருந்து பாடசாலைகளில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’