இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்திக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அவரது கட்சி கூறியுள்ளது.
ஆயினும் அவருக்கு என்ன சுகவீனம் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அவருக்கு ஏற்கனவே அறுவைசிகிச்சை முடிந்து விட்டதாகவும், அவர் உடல் தேறுவதற்கு இன்னமும் சில வாரங்கள் தேவைப்படும் என்றும் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். பின்னர் அது தவறு என்று மறுக்கப்பட்டுள்ளது.
தான் சிகிச்சை பெற்றுத் திரும்பும்வரை காங்கிரஸ் கட்சியின் அலுவல்களை 4 பேர் கொண்ட குழு கவனிக்கும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதில் பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, ராகுல் காந்தி, ஜெனார்தன் திரிவேதி மற்றும் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அஹமது படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏ பி ஜே அப்துல் கலாம், ஆர் கே நாராயணன் ஆகியோர் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தபோது அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது அவர்கள் இந்தியாவிலேயேதான் சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் தனது இதய அறுவை சிகிச்சையை புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில்தான் செய்து கொண்டார்.
இத்தாலியில் பிறந்தவரான சோனியா காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியாவார். அவரது மகனான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். வருங்காலத்தில் அவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’