வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அண்ணா உண்ணாவிரதம்:போலீஸ் அனுமதி

ழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய, வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹஸாரே, நாளை (19.8.11) முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்க இருக்கிறார்.
கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அன்னா ஹஸாரேவுக்கும், டெல்லி காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து, 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் மற்றும் தர்ணாப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள ராம்லீலா மைதானம், மாநகராட்சி ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை காலை முதல் அண்ணா ஹஸாரே அங்கு தனது போராட்டத்தைத் தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி ஆகியோர் தெரிவித்தனர்.
அண்ணா ஹஸாரே
சிறையிலும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார் அண்ணா ஹஸாரே
ராம்லீலா மைதானத்துக்குச் செல்லும் வரை, அண்ணா ஹஸாரே தொடர்ந்து திகார் சிறையிலேயே இருப்பார் என்று கிரண்பேடி தெரிவித்தார்.
கடந்த 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, தனது வீட்டில் இருந்து போலீசாரால் தடு்ப்புக் காவில் அழைத்துச் செல்லப்பட்ட அண்ணா ஹஸாரே, பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அன்றிரவே அவரை விடுதலை செய்வதாக சிறை அதிகாரிகல் அறிவித்தாலும், வெளியே செல்ல மறுத்தார் ஹஸாரே. உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தனக்கு நிபந்தனையற்ற அனுமதி கிடைக்கும் வரை சிறையை விட்டுச் செல்ல முடியாது என பிடிவாதமாக இருந்தார்.
இதையடுத்து, டெல்லி காவல் துறையினருக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஒரு மாதம் போராட்டம் நடத்த அனுமதி தேவை, ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் தொடர்பாக எண்ணிக்கை கட்டுப்பாடு கூடாது என்று ஹஸாரே தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மற்ற அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டாலும், எவ்வளவு நாட்கள் போராட்டம் என்பது தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.

முடிவுக்கு வந்தது இழுபறி நிலை

ஊழலை ஒழிக்க இளைஞர்கள் ஆதரவு
ஊழலை ஒழிப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
இன்று காலை, இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டதால், இழுபறி முடிவுக்கு வந்தது. இருதரப்பும் விட்டுக் கொடுத்து நடந்ததால் உடன்பாடு ஏற்பட்டதாக கிரண்பேடி தெரிவித்தார்.
போராட்டம் நடத்த போலீஸ் சம்மதம் தெரிவித்ததைக் கேட்டு, திகார் சிறைக்கு வெளியே கூடியிருந்த அண்ணா ஹஸாரேவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றார்கள்.
சிறையிலும் அண்ணா ஹஸாரே தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து, மருத்துவர்கள் குழு இன்று வியாழக்கிழமை காலை பரிசோதனை செய்தது.
போராட்டம் நடைபெற உள்ள ராம்லீலா மைதானத்தின் முன்பு, இப்போதே பெருமளவில் அண்ணா ஹஸாரே ஆதரவாளர்கள் கூடியிருக்கிறார்கள். மைதானத்தின் உள்புறம், தூய்மைப்படுத்தும் பணியும், பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான் அங்கு வர அண்ணா முடிவு செய்திருக்கிறார். அவர் வந்தபிறகு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
சிவில் சமூகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் ஷரத்துக்களை உள்ளடக்கிய மக்கள் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றம் ஆராய வேண்டும் என்றும் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள்
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெருகி வருகின்றன
சிவில் சமூகத்தின் கருத்துப்படி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, தனது தரப்பில் தயாரிக்கப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
அரசு அந்த மசோதாவைத் திரும்பப் பெற்று, சிவில் சமூகத்தின் கருத்துக்களையும் உள்ளடக்கிய புதிய லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ஏதும் இல்லை என்றும் முன்னாள் சட்ட அமைச்சரும், தற்போது அண்ணா ஹஸாரேவுடன் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுபவருமான சாந்திபூஷண் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’