வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

'கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயமில்லை'-அரசு

னப்பிரச்சனைத் தீர்வு திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூல முன்மொழிவுகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியிருக்கின்றமை நியாமற்ற விடயம் என இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரும் பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு குழுவில் தலைமை வகிப்பவருமான நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, முன்கூட்டியே அரசாங்கத்தின் முன்மொழிவுகளைக் கோரி கால வரையறைகளை அறிவிக்கும் கடுமையான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாகவும் நிமல் ஸ்ரீபால டி சில்வா பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக இருப்பதாகவும் அனைத்து இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தாம் முயன்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் மீண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு தாராளமாக வரலாம் எனவும் அமைச்சர் கூறினார்.
ஆனால், 10 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் இருக்கத்தானே செய்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த நிமல் ஸ்ரீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை நீண்டகாலம் எடுத்ததை நினைவில் கொண்டு தமிழ் கூட்டமைப்பினர் சர்ப்பந்தத்தை நழுவ விடாது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார்.

அரசிடம் நேர்மையும் நிதானமும் தேவை- கூட்டமைப்பு

இதேவேளை, தாம் அவசரப்பட வில்லையென்று தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நோக்கம் இருந்தால் அரசாங்கம் தமது பதிலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இனப்பிரச்சனை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு காட்டுவதற்காக அரசாங்கம் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை மேசையிலும் அரச தரப்பினர் நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல விடயங்கள் தற்பொழுதும் வடக்கு கிழக்கில் நடந்துகொண்டிருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’