தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் உரையாற்றுகையில், "உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர்களோடு ஆலோசித்து செயற்படவுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசுக்கு பேச்சுவார்தைகளின் போது பல விடயங்களை எடுத்துக் கூறினோம். ஆனால் அரசு அதனை இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நிலை தொடர்பாக இலங்கை அரசு இன்னமும் உணரவில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து எதிர்வரும் காலங்களில் முக்கியமான முடிவு எடுக்கப்படும்" என்றார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன்,எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’