வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன்: மோகன்ராஜ்

ந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளராக செயற்பட்ட முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
குமுதம் இணையத்தளத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் செயற்பாட்டினையும் அவ்விசாரணையின் தலைவராக இருந்த அதிகாரி கார்த்திகேயனின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விசாரிக்க வேண்டிய மிக முக்கிய நபர்களென சந்திரசுவாமி சுப்பிரமணிய சுவாமி குமரன் பத்மநாதன் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார். இவர்கள் கைது செய்யப்பட்டு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் போது அக்கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விட பாரதூரமான குற்றவாளி களான பலர் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். இந்த வழக்கின் முக்கியமான ஒரு சாட்சியாக இருக்கக் கூடியவர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனவும் அவரது சாட்சியம் இந்த வழக்கில் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டுவரலாம் என்பதனா லேயே அவரை இவ்வழக்குத் தொடர்பாக விசாரிப்பது தவிர்க்கப்படுவதாகவும் அவரது முக்கியத்துவம் தெரிந்து கொண்டே இலங்கை அரசு அவரைக் கைது செய்து வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டுகிறது என்றும் குறிப்பிடுகின்றார். இந்த விசாரணைகள் நடைபெற்றபோது அவற்றின் போக்கில் அதிருப்தி அடைந்து அதிலிருந்து வெளியேறியவர் மோகன்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேரறி வாளன் இவ்வழக்கின் விசாரணை நேர்மையானதாக நடத்தப்படவில்லை என்பதும் இவ் வழக்கு விசாரணைகளில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரியான மோகன்ராஜ் இவ்வழக்கின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’