வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இலங்கையர் நால்வர் சென்னையில் கைது


சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கைத் தமிழர் நால்வர், போலியான ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, நாகர் கே.கே. செந்தூரன், கும்மிடிபூண்டி ஆகிய இடங்களில் வசித்த சசிகரன், ராஜேந்திரன், ஸ்ரீராம், செந்தூரன் ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து விமான மூலம் சென்னைக்கு வந்திறங்கியபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த நான்கு பேரும் இந்திய கடவுச்சீட்டு உட்பட போலியான ஆவணங்களுடன் கடந்த ஜுலை மாதம் கோயம்புத்தூரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்றதாகவும் பொலிஸார் கூறினர். இவர்கள் சிங்கப்பூர் முகவரொருவரின் உதவியை பெற்றிருந்தனர். அம்முகவர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக அவர்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும் சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸுக்கு செல்ல இந்த நான்கு பேரும் திட்டமிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் 2.5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட இம்முகவர், இந்த நான்கு பேரையும் சிங்கப்பூரிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கவைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சிங்கப்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இந்த நான்கு பேருக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் இந்த நால்வரையும் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’