ரா ஜிவ்காந்தி கொலை சந்தேக நபர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடை பிறப்பித்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சம்பந்தப்பட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையிலேயே அந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் தூக்குத்தண்டனையை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர். இதேவேளை தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா – ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்குமாறு மசோதா ஒன்றினை கொண்டுவந்தார். இந்த மசோதா ஏகமனதாக அனைவராலும் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’