இத்தாலியில் புனரமைக்கப்பட்டுவரும் நூதனசாலையொன்றில் பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்ததையத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபிள்ஸ் நகரில் இந்த தேசிய தொல்பொருள் நூதனசாலை அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த மர்மம் குறித்து ஆராய்வதற்காக உலகெங்கிமுலுள்ள நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரவு வேளைகளில் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இது குறித்து தெரிவிக்கையில், இரவு நேரங்களில் குறித்த கட்டிடத்தில் அமானுஷ்ய சத்தம் கேட்பதாகவும், அசாதாரண வெப்பத்தை உணர்ந்ததாகவும் கூறியுள்ளதுள்ளடன் சிலர் பேய்களை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
இக்கட்டிட புனரமைப்புக்கு பொறுப்பான கட்டிட வடிவமைப்பாளரான ஒரெஸ்டோ அல்பேரொ, ஊழியர்களை சாந்தப்படுத்துவதற்காக ஓரிரவை அவர்களுடன் கழிப்பதற்கு தீர்மானித்தார். ஆனால் இறுதியில் அவரும் அக்கட்டிடத்தில் பேய் உள்ளது என நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக இத்தாலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
'நான் அதனை எனது தொலைபேசியில் படம் பிடித்தேன். அந்த படத்தில் சிறுமியொருத்தி இருப்பதை போன்றே தெரிந்தது. ஆனால் அங்கு அவ்வேளையில் எந்த சிறுமியும் காணப்படவில்லை. ஊழியர்கள் எவரும் தமது பெண் குழந்தைகளை அழைத்து வரவுமில்லை' அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிபுணர்கள் அந்நிலையத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’