ஆ ளுநரின் உத்தரவு கிடைத்த 7ம் நாள் ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அந்த 3 பேரும் எப்பொழுது தூக்கிலிடப்படுவார்கள் என்று கேட்டதற்கு, சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா கூறியதாவது, ராஜீவ் காந்தி கொலையாளிகள் 3 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான உத்தரவு ஆளுநரிடம் இருந்து வர வேண்டும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம். ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் அவர்கள் 3 பேரையும் வேலூர் சிறையில் வைத்து தூக்கிலிடுவோம் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’