வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 ஆகஸ்ட், 2011

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம்

தே ன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார்.
இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர். நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது. இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார். தனது கணவருக்கு உதவுமாறு கூச்சலிட்டு உதவிக்கு சிலர் வந்துள்ளனர். பின்னர் இவரைக் கரைக்கு கொண்டு வந்து ஹெலிகொப்டர் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அதிகப்படியான குருதி இழப்பு ஏற்பட்டமையே இதற்கான காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நபரொருவர் தான் நபரொருவரைக் கண்டதாகவும் அவரது இடது காலில் பெரிய சதைப்பகுதியொன்றைக் காணமுடியவில்லையெனவும், அவரது தொடை எலும்பைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 2 ஆம் திகதி குறித்த கடற்கரைப்பகுதியில் இதேபோன்று சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி 36 வயதான் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து குறித்த கடற்பகுதியில் குளிப்பதனைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’