வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 ஆகஸ்ட், 2011

மார்பக அழகு சத்திரசிகிச்சை செய்த 83 வயது மூதாட்டி

அமெரிக்காவில் மூதாட்டியொருவர் 83 ஆவது வயதில் மார்பக அழகுக்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்டு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா அனா நகரைச் சேர்ந்த மேரி கோல்ஸ்டட் என்ற மூதாட்டியே தனது 83 ஆவது வயதில் மார்பகத்தை பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார். இச் சத்திரசிகிச்சைக்காக, அவர் 2500 டொலர்களை செலவிட்டுள்ளார். தனது மார்பகம் அதன் இயற்கை அமைப்பை இழந்துவிட்டதால் இச்சத்திரசிகிச்சையை செய்துகொண்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். 'உங்கள் மார்புகள் ஒருபுறம் செல்கின்றன. உங்கள் சிந்தனை ஒருபுறம் செல்கின்றன' என அவர் கூறியுள்ளார். தான் திடகாத்திரமான சிறந்த உடல்தோற்றத்துடன் இருப்பதாககூறும் அவர், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டால் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். தன்னுடைய தாய் மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருந்ததாகவும் அதே போல் தானும் நீண்ட ஆயுளுடன் வாழலாமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அநேகமான ஊடகங்கள் மேற்படி மூதாட்டியின் கதையை பிரசுரித்துள்ளதுடன் சிரேஷ்ட பிரஜைகள் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்துகொள்வது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன. அதிக வயதானோருக்கு அழகுக்காக சத்திரசிகிச்சை செய்வது குறித்து சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், ஆரோக்கியமில்லாத 40 வயதுடையோருக்கு இத்தகைய சத்திரசிகிச்சைகளை செய்வதைவிட 70-75 வயதில் ஆரோக்கியமாக இருப்போருக்கு இச்சத்திரசிகிச்சையை செய்ய தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’