அநுராதபுரம் நீதவான் திருமதி தர்ஷிகா விமலசிறி ஒரேநாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை அவர் வழங்கிய இத்தீர்ப்புகளில் 55 சதவீதமான வழக்குகளின் சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.ஏனையோர் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டர்களில் சிலருக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டது. ஏனையோருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் அவர்களின் கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்யுமாறும் நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டார்.
இவ்வருடம் ஜனவரி 24 ஆம் திகதி நீதிமன்ற அறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 203 வழக்குகளினதும் கோப்புகள் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து புதிய அறிக்கைகளை விரைவாக தயாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை 11.15 மணிமுதல் பிற்பகல் 6.30 மணிவரை 203 வழக்குகளுக்கும் அவர் தீர்ப்பு வழங்கினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’