வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூலை, 2011

இலங்கைக்கு தடைவிதிக்கும் தீர்மானம் குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி

லங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கான உதவியை தடை செய்யும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதையிட்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும் மகிழச்சியில் ஆழ்ந்துள்ளது என 'தி ஏசியன் ஏஜ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அ.இ.அ அண்ணா தி.மு.க வைச் சேர்ந்த பல அமைச்சர்களும், சிரேஷ்ட அங்கத்தவர்களும் அமெரிக்காவின் முன்னுதாரணத்தை பாராட்டி செவ்வாய்க்கிழமை தமிழ் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களை பிரசுரித்திருந்தனர்.
உலகின் பல பாகங்களிலும் தமிழ் புலம்பெயர்ந்தோர் நடத்திய தமிழர்கள் பற்றிய அக்கறை பாராட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு, யுத்தக் குற்றம் இழைத்தோரை விசாரணைக்குட்படுத்தல் ஆகிய விடயங்களில் ஜெயலலிதாவின் முன்னெடுப்புகள் பாராட்டப்பட்டன.
தமிழர்களின் அவலம் பற்றிய அலட்சியப்போக்கை டில்லி கைவிடச் செய்வதற்கான அழுத்தங்களை ஜெயலலிதா பிரயோகிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி செல்வாக்கு இழந்து வருகின்றார். அவர் முக்கிய தருணத்தில் ஈழத் தமிழர்களை கைவிட்டாரென இவர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’