வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூலை, 2011

காங்கேசன்துறை துறைமுகம் சர்வதேச மட்டத்திலும் முக்கியத்துவம் பெறும் ! அமைச்சர் பசில் ராஜபக்ஷ

புனரமைக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
காங்கேசன்துறை துறைமுகத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் வகையிலான புனரமைப்புப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இத்துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கும் இந்திய அரசு உதவி புரிந்துள்ள வகையில் இப்புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்வந்ததையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஒரு காலகட்டத்தில் ஏ-9 பாதை மூடியிருந்த போது மிகக் குறைந்தளவு வசதிகளைக் கொண்டிருந்ததாக இத்துறைமுகம் இருந்த போதிலும் குடாநாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து வந்தது.

மகிந்த சிந்தனையின் அடிப்படையில் மேலும் 04 துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இலங்கையை சர்வதேச கடற்போக்குவரத்து மையமாக மாற்றியமைப்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினது திட்டமாகும்.

அந்த வகையில் இத்துறைமுகமானது தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்று இதன் பணிகள் மென்மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பதாக காங்கேசன்துறை துறைமுகப் பகுதியை சென்றடைந்த பொருதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்.கே.காந்தா பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்டோருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரிசோல்வ் மெரீன் குரூப் நிறுவனத் தலைவர் ஜோசப் ஈ. பெரல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோர் உரையாற்றினர்.

அசோக் கே.காந்த உரையாற்றும் போது காங்கேசன்துறை துறைமுகத்தை நவீன முறையில் புனரமைப்பதன் ஊடாக இது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமையுமெனத் தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இப்புனரமைப்பு பணிகளுக்காக இந்திய அரசு 2.2 பில்லியன் ரூபாவை செலவு செய்யவுள்ளதுடன் முதற்கட்டப் பணிகள் இன்று சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டன.

இதன் மூலம் வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி யாழ் அரச அதிபர் படைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’