அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரகசியமான மர்ம முகாம்களில் 5 ஆயிரம் வரையிலான தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களினதும் மர்ம முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களினதும் விபரங்களை நாம் விசேட நடவடிக்கைகள் ஊடாக பாராளுமன்றில் சமர்பிக்க நேரிடும் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில்,
1983 ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம் ஆயுதப் போராட்டம் என்று இன முரண்பாடு தீவிரமடைந்தது. இலங்கை வரலாற்றில் கறுப்பு புள்ளியாய் பதிந்துள்ள கறுப்பு ஜுலையின் சுவடுகளை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.
ஆனால் தற்போது முப்பதாண்டுகால யுத்தம் முடிவடைந்தும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை முறையாக பயன்படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது. ஜனநாயகம் மீதும் தேசிய அரசியல் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையவும் இல்லை.
நாடு துண்டாடுவதை தடுப்பதற்கு முயற்சித்த அதே ஈடுபாட்டுடன் இனங்களுக்கு இடையே ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும் முயற்சிக்க வேண்டும். கடந்த 10 வருடத்திற்கும் அதிகமான காலங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் இரகசிய முகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எமது தேடல்களில் மூலம் மேற்படி சட்ட விரோதமான தடுத்து வைத்தல் இனம் காணப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கைதிகள் தொடர்பாகவோ விசாரணைகளை முன்னெடுப்பதும் இல்லை. விபரங்களை வெளியிடுவதும் இல்லை. பலரின் அழுத்தங்களையும் புறக்கணித்து நாட்டின் மூலச் சட்டத்தை மீறி தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறை வைத்துள்ளது. பயங்கரவாதம் இல்லாத போதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்ட வழிமுறைகள் உள்ளன.
ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவலில் øவக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு எந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே தெரியவில்லை. எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காக்காமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும். தம் வசம் குறிப்பிட்ட விபரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்போம். தொடர்ந்தும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ___

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’