இந்திய பாகிஸ்தான் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூறியுள்ளனர்
புதுடில்லியில் புதன்கிழமை(27.7.11) அன்று இந்த இருநாட்டின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று தான் உறுதியாக நம்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர் இந்தியாவுடன் ஒத்துழைப்புக்கான ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்மையில்தான் கர் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இரு நாட்டு உறவுகள் குறித்த முன்னெடுப்புகள் தடையில்லாமலும், தடைகள் ஏற்படாத வகையிலும் நடைபெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என ஹீனா ரப்பானி கர் தெரிவித்துள்ளார்.
அதே போன்ற ஒரு எண்ணமும் விருப்பமும் இரு நாட்டு அரசுகளிடம் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பேசிய பிறகு தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில், தீவிரவாதம் தொடர்ந்து அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை, தாமும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
எனினும் தீவிரவாதம் எனும் ஈனச் செயலை எந்த வடிவில் அது இருந்தாலும், அதை ஒழித்துக்கட்ட இருநாட்டு அரசுகள் உறுதியுடன் செயற்பட சித்தமாகவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருந்தன எனவும் எஸ் எம் கிருஷ்ணா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய பாகிஸ்தான் நாட்டு மக்களின் எண்ண ஓட்டங்களில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இருநாட்டவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை தம்மிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தெரிவித்துக் கொள்வதில் பிரச்சினைகள் இருக்கக் கூடாது என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நேசமான உறவு இருநாடுகளின் தேசிய நலனுக்கும் தேவையான ஒன்று எனவும் ஹீனா ரப்பானி கர் தெரிவித்துளார்.
ஆனாலும், புதுடில்லியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் காஷ்மீர் தொடர்பாகவோ அல்லது தீவிரவாதிகளுக்கான ஆதரவு போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்தோ எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று புதுடில்லியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’