வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூலை, 2011

மிருசுவில் படுகொலை வழக்கு விசாரணை

யாழ்ப்பாணம் மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன் கிழமை மீண்டும் நடைபெற்றது.
புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தது.



புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது ஆடைகளே அவை என்பதை அவர்களின் உறவினர்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணை நாளை வியாழக் கிழமை மீண்டும் நடத்தப்படவுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு 17ம் திகதி, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்து மலசலக் கூட குழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கை இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில், ஐந்து இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’