வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூலை, 2011

கிரிக்கெட்- இந்தியா படுதோல்வி

ந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டி முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளது. இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 100 வது போட்டியாக மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டின் 2000 மாவது போட்டியாகவும் இது அமைந்திருந்தது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் கெவின் பீட்டர்ஸன் இரட்டை சதமடித்ததும், இந்தியாவின் ராகுல் டிராவிட் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டூல்கரின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலேயே இருந்தது. முதல் ஆட்டத்தில் 34 ஓட்டங்களும் இரண்டாம் ஆட்டத்தில் 12 ஓட்டங்களும் அவர் மட்டுமே எடுத்தார்.
நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பிரவீண் குமார் ஐந்து விக்கெட்டுகளும், இரண்டாம் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளும் எடுத்தனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 474 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டத்தில் 269 ஓட்டங்களும் எடுத்தது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 286 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டத்தில் 261 ஓட்டங்களும் எடுத்தது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29 ஆம் தேதி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’