வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுப்பு

போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழகத்தில் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கையெழுத்து வேட்டையில் கைச்சாத்திட நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சி சார்பில் நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்கச் சென்றவர்களிடம் ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ள விஜய், 'நான் கையெழுத்து போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை' என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவருக்கு துணை நின்றவர்களுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரியே மேற்படி கட்சியினால் கையெழுத்து திரட்டும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வரும் நடிகர் விஜயிடமும் கையெழுத்து பெறுவதற்கு குறித்த கட்சியினர் எடுத்த முயற்சியே இவ்வாறு தோல்வியில் முடிந்துள்ளதாக தமிழகத்திலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’