வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜூலை, 2011

உருத்திரபுரம் சிவன்சோலை மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் உயரதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன்சோலை மக்கள் தாங்கள் மிக நீண்டகாலமாக பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் எனவே அதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அதற்குஅமைய நேற்றைய தினம் (27) ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சீறினிவாசன் கரைச்சி பிரதேச உதவி அரச அதிபர் நாகேஸ்வரன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் தவசோதி வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரி கௌசிகன் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கிராம அலுவலர் திருமதி சாரதா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிவன்சோலை கிராமத்திற்கு நேரில் விஐயம் செய்தனர்.

இதன் போது அங்கிருந்த முன்பள்ளி கட்டிடத்தில் கூடியிருந்த மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான காணி அனுமதி பத்திரம் வீதி போக்குவரத்து வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் முக்கியமாக மழை காலங்களில் பெரியளவில் வெள்ள நீர் செல்லும் பிரதான வீதியில் உள்ள வாய்காலுக்கான பாலம் அமைத்தல் விடயமும் இவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் பின் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் காணி அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் வீட்டுத்திட்டத்திற்குள் அனைவரும் உள்வாங்கப்படுவீர்கள் எனத் தெரிவித்த அவர் அக் கிராமத்திற்கான பிரதான பாதையினை பிரதேச சபையின் மூலம் புனரமைப்பதற்கும் நடவடிக்கையிiனை மேற்கொண்டார்.

மேலும் சிவன்சோலை விவசாயிகளுக்கு ஒருசில வாரத்திற்குள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்த அவர் முன்பள்ளிக்கு பாதுகாப்பான அறை ஓன்றினை அமைத்து தருவதாகவும் தெரிவித்தார். இதனைவிட பிரதான வீதியிலுள்ள வாய்க்காலுக்கான பாலம் அமைத்தல் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி அபிவிருத்தி திணைக்களம் நீர்பாசனத்திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து மதிப்பீடுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் தேவராசா அவர்கள் இருபதைந்து வருடங்களுக்கு பின் தங்களுடைய கிராமத்திற்கு இவ்வாறு உயரதிகாரிகள் வருகை தந்தமை இதுவே முதல் தடவை என்றும் தங்களுடைய கிராமத்தை எவரும் திரும்பி பார்ப்பதே இல்லை என்றும் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் முயற்சியினால் இம் மாவட்டத்தில் நாங்கள் கைவிடப்பட்டவர்கள் என்ற உணர்வு நீங்கியுள்ளதாகவும் அதற்காக மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’