சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க,
'தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று சோஷலிச இளைஞர் சங்கம் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டது.
இனவாதத்திற்கு எதிராக 2008ஆம் ஆண்டு முதல் சோஷலிச இளைஞர் சங்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. இதனொரு பகுதியே கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று நடைபெறுகின்ற போராட்டமாகும்.
இன ஒற்றுமைக்காக இன்று வீதிகளில் இறங்கியுள்ளோம். வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பெற்றோர்களும் கட்சிகளும் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவோ அல்லது அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவோ இல்லை. நாடாளுமன்றத்திலும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயரை வெளியிடுமாறு கேட்டபோதிலும் இன்னமும் அது வெளியிடப்படவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளை இரகசியமாக தடுத்து வைப்பது சட்டவிரோதமாகும்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்' என்றார்.
சோஷலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர் மோகன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
'பூசாவிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதுவே நாங்கள் அரசாங்கத்திற்கு விடுக்கும் செய்தியாகும்.
மக்களுக்கான உரிமைகள் வழங்காது அவர்களை அடக்குமுறைக்கு அரசாங்கம் உட்படுத்தி வருகின்றது.
யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே நாங்கள் இன்று இந்த ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளோம்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்றையதினம் கொழும்பில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் நாளை பல்வேறு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும்.
இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடியதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’