வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஜூலை, 2011

கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை திட்டமிட்டமிட்டவருக்கு பிணை

லங்கை கிரிக்கெட் அணியின் மீது 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டவர் என கூறப்படும் மாலிக் மொஹமட் இஷாக் என்பவருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கியது.

மாலிக் இஷாக் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டமையால் கடந்த 12 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை விடுவிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாரோ சிலர் பேசியதை கேட்டதாக கூறிய இருவரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இவரை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தியுள்ளதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறிய நீதிபதிகள் இவருக்கு பிணை வழங்கினர்.
மாலிக் இஷாக் மீது 44 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 34 வழக்குகளில் இவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக இவரது வழக்குறைஞர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’