வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஜூலை, 2011

மன்மோகன் சிங்குடன் சோனியா முக்கிய ஆலோசனை- நாளை அமைச்சரவை மாற்றம்?

பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அமைச்சரவை மாற்றம் இன்று மாலை இடம் பெறலாம் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் ஊழல் புகார்களால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெயர் தாறுமாறாக கெட்டுப் போயுள்ளது. வலுவான எதிர்க்கட்சி என்று மத்தியில் எதுவும் இல்லாமல் போனதால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி ஆட்சியும் பெரும் சிக்கலில் மாட்டாமல் நழுவி வருகின்றன.
இருப்பினும் மக்களிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான அதிருப்தி நாளுக்கு நாள் பெருகி வருவதால் கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சரவை மாற்றத்திற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து நீண்டநாட்களாகவே பேசப்பட்டு வந்தபோதிலும் தற்போதுதான் அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இதுவரை 3 முறை சோனியா காந்தியும், பிரதமரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சோனியா காந்தி வந்தார். அங்கு இருவரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக, இன்று மாலையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றம் இடம் பெறும் என்று தெரிகிறது.

நிதித்துறை, உள்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாற்றப்பட மாட்டார்கள். சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அது உறுதியாகத் தெரியவில்லை. கபில் சிபல் வசம் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை நீடிக்கும் என்று தெரிகிறது.

திமுக சார்பில் புதிதாக 2 பேரை சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை திமுக தரப்பிலிருந்து பட்டியல் எதையும் கொடுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை.

சில அமைச்சர்கள் நீக்கப்படலாம். சில புதுமுகங்கள் இடம் பெறலாம். நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜ் பாபர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோபால் சுப்ரமணியம் ராஜினாமாவால் தாமதமா?:

இதற்கிடையே, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறாமல் நாளைக்கு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் கோபால். மேலும் உ.பி அருகே நடந்த கோர ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை மாற்றம் நாளைக்குத் தள்ளிப் போயுள்ளதாக தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’