இன்னல்பட்ட மக்களுக்காக அந்த மக்களுடனேயே கூட இருந்து அவர்களுக்காகவே இறுதிவரை செயற்பட்டு வெற்றி கண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
தீவகம் வேலணையில் இன்றைய தினம் (18) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இன்னல்பட்ட மக்களுடன் கூட இருந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்பதுடன் அந்த மக்களுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இறுதிவரை உறுதியுடன் செயற்பட்டு அவர் வெற்றி கண்டவர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை ஆளும் அரசுக்கு சாதமாக்கிக் கொள்ளும் பட்சத்திலேயே போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் பகுதிகளும் அபிவிருத்தி காண முடியும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று எதைக் கூறினாரோ அதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசனமிக்கத் தலைவரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுடன் என்றும் துணையாக நின்றவர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் உங்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’