வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஜூலை, 2011

இந்திய மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் ராஜினாமா

ந்திய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், இன்று காலை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏர்செல் நிறுவனத்திற்கு 2 ஜி உரிமம் வழங்கியதில் பெரும் முறைகேடுகளைச் செய்தார் என இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குறற்ம் சுமத்தியுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை மலேஷியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்ப்பந்தம் செய்தார். அதன்பின் உடனடியாக ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமங்களை வாரி வழங்கினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’