ஒத்திவைக்கப்பட்ட 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவிருக்கின்ற 19 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுவதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் குடாநாட்டிலும் கிளிநொச்சியிலும் சூறாவளி பிரசாரத்தில் குதித்துள்ளன. பிரதான கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களும் சூடுபிடித்துள்ளனன.
வெற்றிலை சின்னத்தில் போட்டியிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, யானை சின்னத்தில் போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மணி சின்னத்தில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) ஆகிய கட்சிகளுக்களே ஏட்டிக்கு போட்டியாக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’