வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஜூலை, 2011

பேரினவாதிகளுக்கு யாழ்ப்பாண புனித மண்ணில் இடம்கொடுக்க கூடாது: அரியநேந்திரன் _

'அகிம்சைப்போராட்ட தலைமைகளையும், ஆயுதப் போராட்ட தலைமைகளையும் தமிழினத்திற்கு தந்த யாழ்ப்பாண புனித மண்ணில் பேரினவாதிகளுக்கு இடம்கொடுக்க கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'அகிம்சைப்போராட்ட தலைமைகளையும், ஆயுதப் போராட்ட தலைமைகளையும் தமிழினத்திற்கு தந்த யாழ்ப்பாண புனித மண்ணில் பேரினவாதிகளுக்கு இடம்கொடுக்க கூடாது. பேரினவாதிகளுக்கு வாக்களித்து வெட்ககேடான காரியத்தை யாழ் மக்கள் செய்யக்கூடாது .
2010ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த பொதுத்தேர்தலில் வன்னியிலோ கிழக்கு மாகாணத்திலோ தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
அவர்கள் தமிழ் தேசியத்தில் பற்றுறுதியோடு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள். ஆனால் அகிம்சை போராட்ட தலைமைகளும் ஆயுதப்போராட்ட தலைமைகளும் உருவான யாழ்ப்பாணத்தில் கடந்த பொதுத்தேர்தலில் சிங்கள பேரினவாத கட்சியை சேர்ந்த நான்கு பேரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.
இது அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய காரியம். இத்தகைய வெட்ககேடான அவமானத்திற்குரிய காரியத்தை இனிமேல் யாழ்ப்பாண மக்கள் செய்யக்கூடாது. முள்ளிவாய்க்​காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் கொலையாளிகள் யாழ்ப்பாணத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்று சர்வதேசம் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதிலிருந்து தப்புவதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகளை ஆளும் கட்சி கோரி நிற்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்தால் சர்வதேசம் சுமத்தியிருக்கும் போர்க்குற்றச்சாட்டிலிருந்தது தப்பி விடலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இதற்காகவே அரசுத்தலைவர் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உட்பட அமைச்சர்கள் அனைவரும் யாழ்ப்பாண மண்ணில் முகாம் இட்டுள்ளார்கள் என்றும் அரியநேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மேலக மக்கள் முன்னணித்தலைவர் மனோ கணேசன் உட்பட பலரும் உரையாற்றினர்.இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரிலும் இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’