வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஜூலை, 2011

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 9இலிருந்து 5 ஆக குறைப்பு

யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் 9 இலிருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் இந்த 4 ஆசனங்களும் இரத்தினபுரி, குருணாகல், பதுளை, மாத்தறை மாவட்டங்களுக்கு தலா ஒன்றுவீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு தேர்தலின்போது யாழ் மாவட்டத்திற்கு 11 ஆசனங்கள் இருந்தன. 1994 ஆம் ஆண்டு தேர்தலின்போது அந்த எண்ணிக்கை 10 ஆகவும் 2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது 9 ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது.
இனிவரும் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலிருந்து 5 எம்.பிகள் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவர்.
முன்னர் யாழ் மாவட்டத்தில் 816,005 வாக்காளர்கள் இருந்தனர். எனினும் யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்த நிலையில் 2010 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவுகளின்படி யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை 484,791 ஆக குறைவடைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’