மு ன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக அனைத்து நாடாளுமன்றங்களின் சங்கத்தைச் சேர்ந்த இராணி வழக்கறிஞரும் பாரிஸ்டருமான மார்க் ட்ரொவல் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
இவரை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் புவனேக அலுவிஹார, சரத் பொன்சேகாவின் வழக்குரைஞர் நளின் லத்துவஹெட்டிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் மார்க் ட்ரொவல் சரத் பொன்சேகாவுடனும் அவரது மனைவியுடனும் பேசினார்.
பின்னர் ட்ரொவல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, டிரான் அலஸ், ஜயந்த கெற்றகொட ஆகியோருடன் பேசினார்.
மார்க் ட்ரொவல் சர்வதேச பிரபலம் பெற்ற பல வழக்குகளை நேரில் அவதானித்துள்ளார். வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையை நேரில் அவதானிப்பதற்காக இவரை அனைத்து நாடாளுமன்ற சங்கம் அனுப்பி வைத்துள்ளது என பத்திரிகையாளர்களுக்கு ட்ரொவலை அறிமுகம் செய்து வைத்த டிரான் அலஸ் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’