கூ ட்டொப்பந்தம் மூலமாக தோட்டத்தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர்களின் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகத்தில் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
எனினினும் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சாபம் இந்தத் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்களைச் சென்றடையத்தான் போகின்றது. இந்த நாட்டின் தற்போது வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஏனைய தொழிலாளர்கள் கணிசமான சம்பளத்தினைப் பெற்றுவருகின்றனர். அன்றாட கூலித்தொழிலாளர்கள் கூட நாட் சம்பளமாக 1000 ரூபாவைப் பெறுகின்றனர்.
ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 380 ரூபாவால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்தப்புதிய கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக் கொடுப்பனவுகள் தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் பெருத்த இலாபத்தினைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றது.
விலைக்கேற்ற கொடுப்பனவான 30 ரூபாவையும் வருகை ஊக்குவிப்புக்கொடுப்பனவான 105 ரூபாவும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இம்முறை கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை. தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படபோகின்றமையும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதிப்படப் போவதையும் எம்மால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.
ஏனென்றால் நாம் தொழிலாளர்களின் பிள்ளைகள். கூட்டொப்பந்தம் மேற்கொண்டவர்களுக்குத் தொழிலாளர்களின் வேதனை புரியாது என்பதை இந்தப்புதிய கூட்டொப்பந்தம் மீண்டுமொரு முறை உணர்த்தி உள்ளது. எனினும் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு எதிரான எமது போராட்டம் தொடரும்" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’