வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 ஜூன், 2011

பிரான்ஸ் இலத்திரனியல் ஊடகங்களில் சமூக வலையமைப்புகளுக்குத் தடை

பி ரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலையமைப்புகளின் பெயர்களை பயன்படுத்துவதினை தடைசெய்யவுள்ளது.

அந்நாட்டின் சட்டத்திற்கு அமைய வணிக ஸ்தாபனங்களின் பெயர்கள் செய்தி நிகழ்ச்சிகளின் ஊடாக மேம்படுத்தப்படுவதற்கு தடை உள்ளது.
இதன் பிரகாரம் இனிமேல் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையத்தளத்தினை உபயோகிக்கும்போது கவனமாக இருக்கவேண்டுமெனவும், அதன் தேவையை உணர்ந்தே உபயோகிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
பல சமூகவலையத்தளங்கள் உள்ளபோதும் பிரபலமடைந்த இவ்விரண்டு தளங்களின் பெயர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதானது வீண் சிக்கலை ஏற்படுத்துமென பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’