யுத்த வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கினை நடத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தினருக்கான அனுதாபத்தைத் திரட்ட நாம் முயற்சிக்கவில்லை. மாறாக எமது வெற்றிக்கான காரணங்களை உலக நாடுகளின் இராணுவத்தினருடன் அனுபவங்களாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த கருத்தரங்கினை நடத்தவதற்கான நோக்கமாகும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் கருத்தரங்கு வெற்றியளித்தது. இந்த வெற்றியின் உற்சாகத்துடனும் அனைவரதும் வேண்டுகோளுக்கு இணங்கவும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்தி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'யுத்த வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கு' கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது.
41 நாடுகளைச் சேர்ந்த (இலங்கை உட்பட) 80 பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகள், அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என சுமார் 300 பேர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாத ஒழிப்பில் சவால்களும் எதிர்பார்ப்புக்களும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரிணாமமும் சர்வதேச வலையமைப்பும், பயங்கரவாத ஒழிப்பு குறித்த கண்ணோட்டம், யுத்த சேவை உதவிகள் மற்றும் பயிற்சிப் பரிணாமம், இடம்பெயர்ந்தோர், மீள்குடியேற்றம், மீள்கட்டுமாணம், புனர்வாழ்வு, கண்ணிவெடி அகற்றல், தேசத்தைக் கட்டியெழுப்புதல், ஆசியாவின் ஆச்சரியம் ஆகிய தலைப்புக்களிலான விளக்கங்கள் மேற்படி மூன்று நாள் கருத்தரங்கின் போது வழங்கப்பட்டன.
கருத்தரங்குகள் இனிதே நடைபெற்று முடிந்ததை அடுத்து இராணுவ தளபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று கருத்தரங்கு மாநாட்டு மண்டபத்திலேயே நடத்தப்பட்டது. இதன்போது மேற்படி மூன்றுநாள் கருத்தரங்கு திருப்திகரமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட இராணுவ தளபதி தொடர்ந்து கூறுகையில்...
'யுத்தத்தின் போது பெறப்பட்ட அனுபவங்கள் தொடர்பிலும் இலங்கையின் எதிர்காலம் குறித்த விடயங்களையும் சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்டதில் எமது இராணுவம் பெருமையடைகிறது. உலகில் எந்தவொரு இராணுவத்துக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தினை நாம் சரியாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்திக் கொண்டோம். இதுவரை காலமும் வெளியிடப்படாத பல விடயங்களை சர்வதேசத்துக்கு திறந்துவிட்டோம். அவற்றை அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து இலங்கை மிகச் சிறிய நாடாகவே கருதப்படுகிறது. இருப்பினும் எமது படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி அளப்பறியது. எந்தவொரு நாட்டினாலும் ஈட்ட முடியாத வெற்றியை ஈட்டியுள்ளது. அதனால் எமது படையினரின் சாதனை ஏற்றுக்கொள்ள முடியாத சில நாடுகளும் இருக்கின்றன. அவை பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இருப்பினும் எவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் கண்டு நாம் தயங்கப்போவதில்லை.
யுத்த களத்தில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெற்றியின் அனுபவங்களை பாடநெறியாக சர்வதேச நாடுகளின் இராணுவங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைக்கு நான்கு பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவை சார்க் வலையமைப்பில் உள்ளடக்கப்படும் நாடுகளின் இராணுவத்தினருக்கு பயிற்சிகளாக வழங்கப்படுகின்றன.
சர்வதேச ரீதியில் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவும் இராணுவத்தினருக்கு அனுதாபத்தினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்த கருத்தரங்கு நடத்தப்படவில்லை.
யுத்த களத்திலும் நாடு முழுவதிலும் பயங்கரவாதத்தினால் சிக்குண்டிருந்த மக்களைப் பாதுகாத்து மீட்பதற்காகவும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும் முப்படையினர், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவற்றின் மூலம் அவர்கள் அடைந்த வெற்றி அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் நாம் எந்தவொரு சலுகையினையும் எதிர்பார்க்கவில்லை' என்று மேலும் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’